×

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி..!!

 

சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஏப்.,24ல் சென்றுள்ளார்.

இன்று அவர் காலையில் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் மக்களை சந்தித்து பேசினார்.முதல்வருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து அவர் ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.