ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தெலங்கானா முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தின் முதலமைச்சராக இன்று ஹைதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்கிறார்.
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் ஏஐசிசி பொறுப்பாளர் மாணிக் ராவ் தாக்ரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 64 எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசையிடம் கடிதம் வழங்கினர். நாளை பதவியேற்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர். முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பட்டி விக்ரமார்கா, சபீர் அலி, அமைச்சர்களாக அனுசுயா, விவேகானந்தா, சுதர்சன் ரெட்டி, ஸ்ரீதர்பாபு, ஜக்கா ரெட்டி, அனுமந்தராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்