×

நீலகிரியில் முதல்வர் இன்று ஆய்வு : படுகர் இன மக்கள் பேண்ட் வாத்தியம், பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் நீலகிரி, திருப்பூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்திலிருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.அவருக்கு நீலகிரி எல்லையான குஞ்சப்பனையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அத்துடன் அரவேனு, கோத்தகிரி ஆகிய இடங்களில் படுக இன மக்கள் பேண்ட் வாத்தியம், பாரம்பரிய நடனத்துடன் வரவேற்கின்றனர். பின்னர் கொரோனா ஆய்வு கூட்டம், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உனுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெறுகிறது.
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் நீலகிரி, திருப்பூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்திலிருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.அவருக்கு நீலகிரி எல்லையான குஞ்சப்பனையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அத்துடன் அரவேனு, கோத்தகிரி ஆகிய இடங்களில் படுக இன மக்கள் பேண்ட் வாத்தியம், பாரம்பரிய நடனத்துடன் வரவேற்கின்றனர். பின்னர் கொரோனா ஆய்வு கூட்டம், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உனுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அத்துடன் தமிழகம் மாளிகையில் உள்ள விழா அரங்கில் தோட்டகலை துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் இயற்கை வேளான்மை முறையில் பயிரிடப்பட்ட பழங்கள், காய்கறிகள், வாசனை பொருட்கள் பார்வையிடுகிறார்.

மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் போன்ற வன விலங்குகளின் உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டதை பார்வையிடுகிறார். முதல்வர் வருகையால் தமிழகம் மாளிகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பிற்பகல் ஊட்டியிலிருந்து திருப்பூர் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.