×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு… நிரகாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் என்பவர் மீது தொடரப்பட்ட மான நஷ்ட ஈடு வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் என்பவர்
 

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் என்பவர் மீது தொடரப்பட்ட மான நஷ்ட ஈடு வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் என்பவர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


மேலும், மேத்யூ சாமுவேல் மீது மான நஷ்ட வழக்கு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மேத்யூ சாமுவேல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 


இன்று இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க முடியாது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.