×

நெருங்கும் தேர்தல் : பிரதமர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றிருக்கின்றனர். நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து
 

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றிருக்கின்றனர். நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு முதல்வர் பழனிசாமி சென்றிருக்கிறார்.

மெட்ரோ ரயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்க பிரதமரிடம் முதல்வர் கோருவார் என்றும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு உட்பட பல்வேறு திட்ட தொடக்க விழா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, சட்டமன்ற தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சார பயணங்கள் குறித்தும் பிரதமருடன் முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.