×

#BREAKING தமிழக எம்பிக்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

 

தமிழக எம்பிக்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கலந்தாய்வு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் கலைவாணர் அரங்கி்் எம்.பிக்கள் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய உத்தேசித்துள்ள நிலையில், எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.