×

“பெயிலானவர்களின் பாதுகாவலர்” -என்று முதல்வரை வாழ்த்தும் அரியர்ஸ் மாணவர்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் அதை எழுதாமலே பாஸ் என கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்னது அந்த மாணவர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பத்தாம் க்ளாஸ் மாணவர்கள் பரீட்சை எழுதாமல் ஆள் பாஸ் என அறிவிக்கப்பட்டதில் ,சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் .இப்போது பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு தவிர
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் அதை எழுதாமலே பாஸ் என கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்னது அந்த மாணவர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .


தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பத்தாம் க்ளாஸ் மாணவர்கள் பரீட்சை எழுதாமல் ஆள் பாஸ் என அறிவிக்கப்பட்டதில் ,சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் .இப்போது பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து அரியர் பாட தேர்வுகளிலும் ஆள் பாஸ் என்ற அறிவிப்பால் கல்லூரி மாணவர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் .
இதனால் படிக்காமல் கல்லூரிகளில் சுற்றி விட்டு ஒரு மூட்டை அரியர்ஸுடன் வெளியே வந்த பல மாணவர்கள் கல்லூரி படிப்பை டிஸ்கன்டினியூ செய்ய இருந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மீண்டும் படிக்கும் எண்ணத்தை தோற்றுவித்துள்ளதாக ஒரு மாணவர் கூறினார் .இதனால் இப்படி பாஸ் ஆன பல மாணவர்கள் முதலவரை வாழ்த்தியும் பல மீம்ஸ்கள் வெளியிட்டும் தங்களின் நன்றிகளை சமூக ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்கள் .
ஆனால் பல கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் படிக்காமல் பாஸ் ஆவதை விரும்பாமல் அதை விமர்சித்து வருகிறார்கள் .அவர்களை பற்றி மாணவர்கள், அவர்கள் ட்யூஷன் வைத்து கொள்ளையடிப்பது கெட்டுவிட்டதால் இப்படி புலம்புவதாக கூறினார்கள் .