×

சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்

 

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பெரியாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த நிலையில், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.