இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!
Jul 15, 2025, 05:45 IST
இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்த தகவல்படி, தலைமை நீதிபதி கவாய் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
"தலைமை நீதிபதி நன்றாக குணமடைந்து வருகிறார். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பி.டி.ஐ மேற்கோள் காட்டிய வட்டாரம் தெரிவித்துள்ளது.