×

கொரோனாவால் சென்னையில் தலைமை மருத்துவர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்களுக்கு வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மருத்துவர்களும், காவலர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த
 

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்களுக்கு வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மருத்துவர்களும், காவலர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தலைமை மருத்துவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை மருத்துவர் சுகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.