அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு
Updated: Jan 9, 2024, 12:33 IST
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த சூழலில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர் கனமழையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.