×

நீலகிரியில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் கோழிகளுக்கு தடை

 

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

கேரள மாநிலத்தில் அடிக்கடி பரவும் பறவைக்காய்ச்சல் நோயை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில், உயிரியல் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க கால்நடை மருத்துவக்கல்லூரி ஆய்வகங்கள் மூலம் தொடர்ச்சியான நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறை படிப்படியாக சர்வதேச தரத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட பண்ணைகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்ட எல்லைப் பகுதியில் 7 சோதனை சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கண்காணிப்பு நடப்பதாகவும் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.