×

சின்னம்மை அதிகரிக்க வாய்ப்பு- சுகாதாரத்துறை எச்சரிக்கை

 

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்ரவரி இறுதியிலேயே தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்ரவரி இறுதியிலேயே தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை நோய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, சின்னம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமெனவும், நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை உண்ணுவது, அடிக்கடி கைகழுவுதல் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், சின்னம்மை பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதையும் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.