#BREAKING சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு
கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என வளர்ப்பு கூலி வழங்க கோரி ஜனவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறுக சிறுக தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி தற்போது சில்லறை கடைகளில் 1 கிலோ கோழி இறைச்சி 360 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு காரணமாக கோழி இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்து காணப்படுவதுடன் மீன் சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மீனின் விலை 100 ரூபாய் முதல் விற்பனையாகிறது. மத்தி மீன் 100 ரூபாய்க்கும் கட்லா பாறை உள்ளிட்ட மீன் வகைகள் 150, 160 எனவும், இறால் 380 ரூபாய் என வழக்கத்தை விட விலை குறைந்தே விற்பனையாகிறது. தை அமாவாசை என்பதால் விற்பனை குறைவாக இருக்கும் என மீன் விலை குறைந்து காணப்பட்ட நிலையிலும் சிக்கன் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் மீன் வாங்க ஆர்வம் காட்டியதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.