கோழி இறைச்சி விற்பனை கடைகள் ஸ்டிரைக் வாபஸ்
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை தொடங்குவதாக அறிவித்த கோழி இறைச்சி விற்பனை கடைகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை தொடங்குவதாக அறிவித்த கோழி இறைச்சி விற்பனை கடைகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. தீவன கட்டுப்பாட்டு நெறிமுறை கடைபிடிக்க வலியுறுத்தி கோழி இறைச்சி விற்பனை கடைகள் அறிவித்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரியில் நாளை கறிக்கோழி விற்பனையாளர்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் வாபஸ் பெறப்பட்டதாக 600 கோழி கடைகள் இயங்கும் என பிராய்லர் கோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. நாளை முதல் கோழி இறைச்சி விற்பனை இல்லை என இறைச்சி விற்பனையாளர்கள் ்்தெரிவித்திருந்த நிலையில், கூடுதல் எடைக்காக கடைசி நேரத்தில் கோழிகளுக்கு தீவனம் கொடுக்கப்படாது என பண்ணை உரிமையாளர்கள் கொடுத்த உறுதியை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.