சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் 'செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 2026'
சென்னையில் மீண்டும் செட்டிநாடு கண்காட்சி 'செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 2026' என்ற பெயரில் நடைபெறவுள்ளது.
செட்டிநாடு பொருட்களுக்கென ஒரு தனி அழகும், சிறப்பம்சமும் இருக்கும். செட்டிநாடு கண்காட்சி என்பது செட்டிநாட்டுப் பாரம்பரிய உணவுகள், பொம்மைகள், நகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் ஒரு கலாச்சாரத் திருவிழா.
அந்தவகையில் நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (Nagarathar Chamber of Commerce) சார்பில் மூன்றாவது ஆண்டாக நடைபெறும் "Chettinaadu Business Expo 2026" வருகிற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட வர்த்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகைகள், செட்டிநாட்டு உணவு வகைகள், ஆடை அலங்காரம், கைவினைப் பொருட்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகள் மற்றும் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளன. தொழில்முனைவோர், வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் சந்தித்து புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த தளமாக இந்த கண்காட்சி அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வணிக வளர்ச்சி, புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் செட்டிநாட்டு பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் இந்த Chettinaadu Business Expo 2026-க்கு தொழில்துறையினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.