×

சென்னையில் நாளை தொடங்குகிறது செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0!

 

 

செட்டிநாட்டின் பாரம்பரியம், வணிகத்தின் புதிய வளர்ச்சியாக 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் Chettinaadu Business Expo 3.0 நாளை தொடங்குகிறது.


நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Chettinaadu Business Expo 3.0” பிரம்மாண்ட வர்த்தகக் கண்காட்சி நாளை (ஆகஸ்ட் 15) மற்றும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன.  செட்டிநாட்டு பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில், Jewellery, Cuisine, Fashion, Handicrafts, Lifestyle மற்றும் Business உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளன.

புதிய வணிக வாய்ப்புகளுக்கான தளம் 

தொழில்முனைவோர், வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் சந்தித்து புதிய தொடர்புகளையும் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. “Two days. Two hundred stalls. One legacy.” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த எக்ஸ்போ, செட்டிநாட்டின் பாரம்பரியத்தையும் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியையும் ஒரே தளத்தில் கொண்டுவருகிறது. இந்த மாபெரும் கண்காட்சிக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்கள் மற்றும் பார்ட்னர்களாக இணைந்துள்ளன.

பொதுமக்களுக்கு அழைப்பு 

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களிலும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கண்காட்சி நடைபெறும். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.