கர்நாடக காங்.அரசுக்கு செக்..! இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!
கர்நாடகாவில் காவிரி நீரை தடுத்து மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்படும் பட்சத்தில் தமிழகத்தல் முற்றிலுமாக தண்ணீர் வழங்குவது பாதிக்கப்படும். எனவே மேகதாது அணை கட்டுவதை தடுத்த தமிழக அரசு தொடர்ந்து தடை போட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்ய உள்ளார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நீரால் பயன்பெறும் கேரளா, புதுச்சேரி அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் டில்லி சென்ற டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தினார்.
'கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக சட்டசபையில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் ஆற்றிய உரை மூலம், தமிழக அரசு அறிவித்தது இருந்தது.
இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.