×

#BREAKING சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி தேர்வு!

 

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தவெக அரசு தேர்வு செய்தது.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். 

இந்நிலையில் உலகளாவிய முதலீடுகள் ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதற்கும் தமிழகத்திற்கு இரண்டாவது சர்வதேச விமானம் தேவை என்பதை வல்லுநர்கள் வலியுறுத்திவரும் நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தவெக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக்கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு  தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. செய்யூருக்கு தாம்பரம் விமானப் படை தளத்தின் வான்வெளி அனுமதியும், கும்மிடிப்பூண்டிக்கு ஸ்ரீஹரிகோட்டா அமைவிடக் கட்டுப்பாடுகளும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகின்றன. செய்யூர் தளம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இரு இடங்களிலும் TIDCO குழு முதற்கட்ட ஆய்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.