×

மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் - உறவினர்கள் சாலை மறியல்

 

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் மரணமடைந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று (04.12.2024) இரவு 134-வது பிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் சையத் குலாப் என்பவர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் ரூ.5.00 இலட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது என கூறினார். 


 
இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர் சையத் குலாப்பின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் கோபத்துடன் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.