23 ஆண்டுகால வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
Jan 10, 2025, 13:49 IST
23 ஆண்டுகால வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் 2019ம் ஆண்டு போலீசார், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.