செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய சென்னை சிறப்பு நீதிமன்றம்
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உட்பட 50 பேருக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. 50 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் பென் டிரைவில் வழங்கபட்டன.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடதக்கது.