நாளை இரவு வரை சென்னை மக்களே உஷார்... வெளியான வானிலை அலர்ட்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. காலை முதல் கொட்டிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு நின்றிருந்த நிலையில் மீண்டும் வெளுக்கத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னைக்கு அருகிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் நாளை இரவு வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மைய ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் சுழற்சி காரணமாக எப்போது வேண்டுமானாலும் மேகத்திரள் உருவாகி மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தீவிர மழைப்பொழிவை தரக்கூடிய மழை மேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.