×

கொரோனாவுக்கு ரூ.5 லட்சம் பேக்கேஜ் என்று வாங்கிவிட்டு, 11 லட்சத்தை கூடுதலாக கேட்ட மருத்துவமனை! – குடும்பத்தினர் அதிர்ச்சி

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனாவுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்துவிட்டு, டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் மீதி 11 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 நாட்களுக்கு முன்பு கொரோனாத் தொற்று உறுதியானது. இதனால், அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்பாமல் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் எவ்வளவு என்று விசாரித்துள்ளார். நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு
 

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனாவுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்துவிட்டு, டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் மீதி 11 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 நாட்களுக்கு முன்பு கொரோனாத் தொற்று உறுதியானது. இதனால், அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்பாமல் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் எவ்வளவு என்று விசாரித்துள்ளார்.


நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ரூ.5 லட்சம் மட்டுமே வசூலிக்கிறோம் என்று கூறியுள்ளது. மற்ற மருத்துவமனைகளை விட குறைவாக கேட்கிறார்களே என்று நம்பி அவர் அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கொரோனாவுக்கு சிகிச்சை இல்லை என்றாலும், மருத்துவமனையில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையே அவரை குணமாக்கியது.


இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில், அவருக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது. எனவே, அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். சரி, நாங்கள் அவரை அழைத்துச் செல்கிறோம் என்று கூறியபோது, பெரிய பில் ஒன்றை நீட்டியது தனியார் மருத்துவமனை. அதில், ரூ.11 லட்சம் கட்ட வேண்டும் என்று இருந்தது. கேட்டபோது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட டெஸ்ட், சிகிச்சை என்று புதுபுது கதை சொல்லியிருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சியடைந்த மனோகரனின் குடும்பத்தினர் பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் மனோகரனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மனோகரனின் மனைவி ஜெகதீஸ்வர், “ரூ.5 லட்சம் செலவாகும் என்று கூறி முன்னதாகவே அதை வசூலித்துவிட்டு, இப்போது ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மனோகரனை மீட்டதாக தெரிகிறது.
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார் வந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.