திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!
Jul 1, 2026, 17:47 IST
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.