×

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல்துறை அழைப்பு..!

 

'தேர்தல் பணி​யாற்ற விருப்​பம் உள்ள முன்​னாள் ராணுவ வீரர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்’ என சென்னை காவல் துறை தேர்தல் பிரிவு அதி​காரி​கள் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, தேர்தல் பணியாற்ற விருப்​பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதி​காரி​கள், போலீ​ஸார், முன்​னாள் ராணுவ வீரர்​கள் மற்​றும் முன்​னாள் துணை ராணுவ வீரர்​கள் தாங்​கள் வசிக்​கும் பகு​திக்கு உட்​பட்ட சென்னை காவல் இணை ஆணை​யர் அலு​வல​கத்​தில் செயல்​படும் தேர்தல் பிரிவு ஆய்​வாளரைத் தொடர்பு கொண்டு வரும் 26-ம் தேதிக்​குள் தங்​களின் பெயர், முகவரியை பதிவு செய்​து​கொள்​ள​வும்.

தேர்​தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிர்​ண​யிக்​கப்​படும் ஊதி​யம் பெற்​றுத் தரப்​படும். விருப்​பம் உள்​ளவர்​கள் சென்னை வடக்கு மண்டல ஆய்​வாளர் ஆனந்த் 9498145519, மேற்கு மண்டல ஆய்​வாளர் சாந்​தினி தேவி 9840106030, கிழக்கு மண்டல ஆய்​வாளர் பத்​மகு​மாரி 9498197388, தெற்கு மண்டல ஆய்​வாளர் துர்கா தேவி 9498003162 ஆகியோரை தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.