×

“ஒரு வாரமா தண்ணி வரல! காசு கொடுத்து வாங்க CM மாசம் 10,000 ரூபாவா போடுறாரு”- கொடுங்கையூர் மக்கள் ஆவேசம்

 

 

பெரம்பூர் அருகே கொடுங்கையூரில் ஒரு வாரமாக தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் அருகே கொடுங்கையூரில் ஒரு வாரமாக தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், தண்ணீர் வந்தால்தான் கிளம்புவோம் என்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு குடிநீர் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி இன்று தண்ணீர் கிடைக்க வசதி செய்வதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இங்கு 2500 குடும்பங்கள் உள்ளனர். 7 நாட்களாக தண்ணீர் வராததால் அலுவலகத்திற்கோ, மாணவர்கள் பள்ளிக்கோ செல்ல முடியவில்லை என்றும் மக்கள் கோபத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லை... CM என்ன எங்களுக்கு மாதம் 10,000 ரூபாயா போடுறாரு? என்று மக்கள் வேதனையுடன் கேள்வி தெரிவிக்கின்றனர்.