☰
×

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்!

 

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் அக்டோபர் 11, 2026 அன்று மெட்ரோ இரயில் பயணிகள் சேவையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடங்கியது. இச்சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வழித்தடம் 4-இல் இரயில் சேவை தொடங்கும் நேரத்தை அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6.00 மணியாக மாற்றியமைப்பதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. இந்த நேர மாற்றம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு. வடபழனி மற்றும் பூவிருந்தவல்லி நோக்கி அதிகாலைப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23, 2026 முதல், 15 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடத்தின் இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும். 

வழித்தடம் 4 (மஞ்சள் வழித்தடம்) - பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை இயக்கப்படும் மெட்ரோ இரயில்களின் திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் இரயில் சேவை இடைவெளிகள்:


பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4-இன் வடபழனி மெட்ரோ ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி இரயில் சேவை இரவு 9.00 மணிக்கு இயக்கப்படும். எனவே, பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட இரயில் சேவை நேரத்தைக் கவனத்தில் கொண்டு, தங்களது திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.