×

சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? அதை மூடிவிடலாம் - அன்புமணி ராமதாஸ்

 

வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாக இருந்ததாகவும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் ஒரு சில இடங்களில் அதிமிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததனால் அதன் அடிப்படையில் கனமழை எதிர்கொள்ள தயாரானோம் .ஆனால் மழை அப்படி பெய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்நிலையில் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்; அது தேவையில்லை, வேஸ்ட் . வானிலை மையம் செய்கிற வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் செய்வான்; சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறார்கள்; இது எங்களுக்கு தெரியாதா? உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிவருகிறது; இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு ? காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக T25,000 வழங்க வேண்டும்; தமிழக அரசு கோரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்; குறைந்தபட்சமாக 2 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.