×

அத்துமீறிய தவெகவினர்! அதிரடி உத்தரவு போட்ட மேயர் பிரியா

 

சென்னையில் பள்ளி வளாகத்தில் வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது என மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “தவெகவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருத்தப்படுகின்றனர். சென்னையில் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருந்தி கொண்டிருக்கிறார்கள். திமுகவின் இந்த தோல்வி தற்காலிகமானதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத யாரும் பள்ளி பள்ளி வளாகத்தில் வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது. தலைமை ஆசிரியர் அனுமதி பெறாமல் இனிப்பு உள்ளிட்ட எதையும் மாணவர்களுக்கு வழங்க கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்றால் கூட குறிப்பிட்ட தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்” என்றார்.

அண்மையில் த.வெ.க. வை சேர்ந்தவர்கள் மாநகராட்சி பள்ளியில் கட்சி துண்டு அணிந்து மாணவர்களுக்கு உணவுகளை வழங்கியது குறிப்பிடதக்கது