☰
×

"என் மீது Targeted Abuse! சட்ட நடவடிக்கை எடுப்பேன்"- மேயர் பிரியா

 

"Targeted abuse-ஐ செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியா தனது எக்ஸ் தளத்தில், "இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின்  Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. 

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி  ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக  இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.   இந்த Targeted abuse-ஐச்  செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.