அமைச்சர் கீர்த்தனா வாயை திறந்தாலே பொய் தான்... நேப்பியர் பாலம் கீழ தொங்கவிடுவீங்க”- மேயர் பிரியா
நேப்பியர் பாலம் குறித்த மேயர் பிரியாவின் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, “தவெக அமைச்சர்களுக்கு தங்களின் பொறுப்பு என்னவென்றுகூட தெரியாமல், ரீல்ஸ் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதிலும் கீர்த்தனா என்ற ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார். சட்டமன்றத்திலேயே பொய்யான தகவலைப் பேசிவிட்டு, பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் எனக் கூறுகிறார். இப்படிதான் தவெக ஆட்சியில் லட்சணம் இருக்கிறது...
திமுக இல்லனா பெண்கள் தோசை கரண்டிய தான் புடிச்சிட்டு இருந்திருப்பாங்க, இப்படி மேடை ஏறி மைக் புடிச்சு பேசியிருக்கமாட்டோம். உங்க விஜய், உங்க அண்ணன் விஜய், உங்க பையன் விஜய், உங்க தம்பி விஜய்' என்று கூறினீர்கள். இன்று 7, 8 வயது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள். இப்போது எங்கு சென்றீர்கள்? சினிமாவில் வருவது போல், 'நேப்பியர் பாலத்துக்குக் கீழே தொங்கவிடுவாங்க' என்று ஓட்டுப் போட்ட மக்களுக்கு சின்ன பாதுகாப்புகூட இல்லாமல், குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்புகூட கொடுக்க முடியாத அளவுக்குத்தான் இன்றைய தமிழ்நாடு அரசு உள்ளது. நாம ரீல்ஸ் போட்டு ஜெயிக்கவேண்டிய அவசியமே இல்ல.. நமக்கு கொள்கை இருக்கு, தலைவர் இருக்காரு, சின்னவர் இருக்காரு..” என்றார்.