"விமர்சனம் மட்டுமே சொல்லி ஆட்சி நடத்தி வருகின்றனர்"- மேயர் பிரியா
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கோவை பெரியார் அறிவுலகம் அறிமுகம் செய்யப்பட்டதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கோவை பெரியார் அறிவுலகம் அறிமுகம் செய்யப்பட்டது. தவெகவினர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே சொல்கின்றனர். விமர்சனங்கள் வைப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள்.. தவெக என்ன திட்டம் கொண்டுவந்தார்கள்..
நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று ஒரு 10 திட்டங்களை இந்த அரசு சொல்ல முடியுமா?
த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆகிறது. இந்த 6 மாத காலத்தில் ஒரு திட்டத்தைக் கூட இவர்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது த.வெ.க. அரசு" என்றார்.