×

ஊரடங்கை பிறப்பிக்காதது ஏன்? உயர்நீதிமன்றம்

கொரோனா பரவலை தடுக்க அரசு எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுகடங்காமல் கொரோனா பாதிப்பு பரவிவருகிறது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, குஜராத் உள்ளிட்டவை இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக சத்தீஸ்கருடான பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து
 

கொரோனா பரவலை தடுக்க அரசு எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுகடங்காமல் கொரோனா பாதிப்பு பரவிவருகிறது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, குஜராத் உள்ளிட்டவை இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக சத்தீஸ்கருடான பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கட்டுப்பாடுகளும் இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் என கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா வைரஸ் பரவி வருவதை அரசு மிக தீவிர பிரச்னையாக கருத வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.