×

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு கொண்டுவர உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிடு வரைவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் புதிதாக மிகப்பெரிய முதலீட்டில் தொழில் தொடங்கும்போது பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வரைவை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களின் பார்வைக்கு வழங்க வேண்டும்
 

மத்திய அரசு கொண்டுவர உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிடு வரைவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் புதிதாக மிகப்பெரிய முதலீட்டில் தொழில் தொடங்கும்போது பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வரைவை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களின் பார்வைக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு இந்த பணியைத் தொடங்கவில்லை.

மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்காதது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இந்த வரைவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் நல சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வரைவுக்கு எதிராக எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். வழக்கை நாளைக்கு (ஆகஸ்ட் 7) ஒத்திவைத்தனர். மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.