#BREAKING குட் நியூஸ்! ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் ரூ.560 குறைந்து ரூ.99840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. அதன் உச்சமாக டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை, உச்சமாக ரூ.1.04 லட்சம் வரை சென்றது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்ததால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்தது குறிப்பிடதக்கது.