#BREAKING தங்கம் விலை திடீர் சரிவு
Mar 26, 2026, 16:34 IST
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்தது.
ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டது. இன்று (மார்ச் 26) காலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து, ரூ.13,670க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து, ரூ.1,06,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.320 குறைந்து ரூ.13,350க்கு விற்கப்படுகிறது.