அவசரபட்டு தங்கம் வாங்கிடாதீங்க... இன்னும் விலை குறையுமாம்!
வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை குறையக்கூடும் என நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5360 ரூபாய் குறைந்தது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 670 குறைந்து ஒரு கிராம் 13, 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 1,11,200 ஒரு சவரன் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 10000 குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி அளித்த பேட்டியில், “வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை குறையக்கூடும். பொதுவாகப் போர்ச் சூழலில் தங்கம் விலை உயரும். ஆனால், தற்போது குறைந்துள்ளது. இதற்கு கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்ததே காரணம். போர் முடிவுக்கு வரும்போது, முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் பக்கம் திரும்புவார்கள். அப்படித் திரும்பும்போது, தங்கம் விலை இதற்கு முன்னால் இருந்ததை விட மிக உச்சமான விலைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்” என்றார்.
-