×

#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

 

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அந்த வகையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 95,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து 11,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.