#BREAKING காலையில் குறைந்த தங்கம் விலை தற்போது உயர்ந்ததால் அதிர்ச்சி
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.2000 உயர்ந்துள்ளது. அதன்படி, #BREAKING காலையில் குறைந்த தங்கம் விலை தற்போது உயர்ந்ததால் அதிர்ச்சிஒரு கிராம் ரூ.13,250க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. நேற்று கூட தங்கம் விலை சவரனுக்கு 7600 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அமெரிக்கா அதிபர் டிரம்ப் 5 நாள் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் தங்கம் விலை 5360 உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இன்று மீண்டும் தங்கம் விலை உயரும் என பயத்தில் இருந்த மக்களுக்கு காலையில் நற்செய்தியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.