#BREAKING தங்கம் விலை மீண்டும் உயர்வு
Updated: Oct 13, 2025, 15:46 IST
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலையில் சவரனுக்கு மேலும் ரூ.440 உயர்ந்து ரூ.92,640க்கும் ஒரு கிராம் 55 ரூபாய் அதிகரித்து ரூ.11,580க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.197க்கு விற்பனை செய்யப்படுகிறது.