எகிறும் தங்கம் விலை! ரூ.86,000ஐ கடந்தது
Sep 29, 2025, 19:06 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,040 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.85,600க்கும் ஒரு கிராம் ரூ. 10,700க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மாலை ரூ.560 உயர்ந்து ரூ.86,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,770-க்கு விற்கப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.