☰
×

ரூ.2680 குறைவு... ஒரே நாளில் அடியோடு மாறிய தங்கம் விலை

 

தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.800 குறைந்து விற்கப்படுகிறது.


இந்தியர்களின் முக்கிய சேமிப்பு மற்றும் மதிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது தங்கம். அதனாலேயே ஏழை, எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தங்கம் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். அந்த வகையில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவிருக்கின்றன. இதனை முன்னிட்டு பலர் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சந்தை நிலவரம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றம் போன்றவை தங்கம் விலை தாக்கத்தை ஏற்படுத்துவதால் தினந்தோறும் விலை மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,665க்கும் ஒரு சவரன் ரூ.1,09,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.