×

மீண்டும் ஒரு லட்சத்தை கடந்தது தங்கம் விலை

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது. 


தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், பிற்பகல் ரூ.720 உயர்ந்துள்ளது. அதன்படி, 1 சவரன் - ரூ.1,00,560- க்கும், 1 கிராம் - ரூ.12,570-க்கும் விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 கூடி, மீண்டும் ரூ.1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. அதன்பிறகு தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா இடையோன பதற்றம், இந்தியாவிற்கு எதிரான வரிவிதிப்பு, ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் காஸா போர், சீனா உடனான வர்த்தக போர், அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பங்கு சந்தையில் இருந்து முதலிட்டார்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.