×

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை,  கடந்த மாதம் இறுதியில்  தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது.  அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த வாரத்தில் மட்டும்  சவரனுக்கு ரூ.2,500 குறைந்தது.  இந்த நிலையில்  ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.  

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனையகிறது. ஒரு கிராம்  ரூ.10 அதிகரித்து ரூ.9,060க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு   ஒரு கிராம்  ரூ.120க்கு விற்பனையாகிறது.