தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
Jan 7, 2026, 18:56 IST
ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை முதல் ஏற்ற இறக்கத்தில் உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,02,960க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 12,870க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கும், கிராம் ரூ.12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2.77 லட்சத்துக்கும், கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.277க்கும் விற்பனை செய்யப்படுகிறது.