×

#BREAKING தங்கம் விலை அதிரடி குறைவு

 

இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.


2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுரங்கச் செலவுகளை விட தங்கம் விலை உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத லாபத்தை அடைந்திருப்பதாக உலக தங்கம் கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.மறுபுறம், தங்கம் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். அமெரிக்க - ஈரான் போரால் தங்கம் விலை குறையத் தொடங்கியதால், இந்த விலை சரிவு நீடிக்கும் என நிபுணர்கள் கூறிவந்தனர். இதனால் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், அந்த கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்த ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த தற்காலிக விலையேற்றம் கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

இன்று காலை (செப்டம்பர் 1)  22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,400 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175க்கும் விற்கப்படுகிறது.