×

தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அதிரடி

 

தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னை மாநகராட்சி தொடங்கவுள்ளது.

தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவர். நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும். ஆகஸ்ட் 9ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படுகிறது. முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு செல்லும்போது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.