×

“பேனர், பதாகைகளை அகற்றுங்கள்” – சென்னை மாநகராட்சி உத்தரவு!

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி, நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கவிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்படவிருப்பதால் சென்னை மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால், சென்னையில்
 

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி, நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கவிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் மழைக்கே சென்னையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்படவிருப்பதால் சென்னை மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால், சென்னையில் 200 வார்டுகளில் 600 மோட்டார் இயந்திரங்கள் கொண்டு, மழை நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் மற்றும் பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.