×

கடமையாக்கப்பட்ட ஊரடங்கு… 30 குழுக்களை களமிறக்கிய சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, இன்று முதல் கடமையாக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் பொருட்டு கண்காணிப்பு குழுக்களை இரட்டிப்பாகியுள்ளது சென்னை மாநகராட்சி. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் ஊரடங்கை கண்காணிக்க 5 நபர்கள் அடங்கிய குழு என
 

தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, இன்று முதல் கடமையாக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் பொருட்டு கண்காணிப்பு குழுக்களை இரட்டிப்பாகியுள்ளது சென்னை மாநகராட்சி.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் ஊரடங்கை கண்காணிக்க 5 நபர்கள் அடங்கிய குழு என 15 குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவினருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனைகளை வழங்கினார்கள். ஊரடங்கு கடைபிடிக்காத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் கடைகளை மூடி சீல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி, இதுவரை கொரோனா விதிகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து ரூ.21,21,800 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாநகராட்சியின் நோக்கமல்ல. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் ஊரடங்கை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு குழு என நியமிக்கப்பட்டிருந்த 15 குழுக்கள், இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 15 மண்டலத்திற்கும் தலா 2 குழுக்கள் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.